கள்வன் என் காதலி.....
விடுமுறை நாள்தனில்
என் கரம் பற்றி
எங்குமே வந்திடுவாள் எடுப்பாக....
கறுப்பென்றாலும் "கன்டோசு"
என் கையில் தவழ்திடுவாள்...
என் நண்பர் கையணைக்க
தயங்கிடவும் மாட்டாள்.
என் நண்பர் அவள் மேனி வருடிடவே
பார்த்து நிற்பேன்......
அவள்தன் 'பளிச்'சிடும் வதனமதை.....
எவன் கரம் வருடினாலும்
வருந்திடமாட்டேன்...
என் முகம் பார்த்து அடிக்கடி சிரித்திட்டால்....!
இறுதியில்.......
பலர் கை பட்டவளை
பக்குவமாய் எடுத்துச்சென்று
மிருதுவாய் பட்டுமேனி
சுத்தம் செய்து....
படுக்கவும் வைத்திடுவேன்
அவள் இடத்தில்.....
அவள்தான் என் கறுப்புக்காதலி......
'நிக்கொன்3100D' கமெரா........!!!!!!
என் நண்பர் கையணைக்க
ReplyDeleteதயங்கிடவும் மாட்டாள். அப்படின்னு ஆரம்பிக்கும் போது i phone ஆ இருக்குமோ எண்டு நினைச்சன் .......mmm good one,,,,,,,,,
நன்றி.....
ReplyDeleteதொலைபேசி என்று தான் நான் நினைத்தேன், ஆனாலும் "என் நண்பர் கையணைக்க தயங்கிடவும் மாட்டாள்.என் நண்பர் அவள் மேனி வருடிடவே
ReplyDeleteபார்த்து நிற்பேன்.." என்பது அழகிய சிந்தனை..
ம்ம்ம்...
ReplyDelete