Thursday, February 3, 2011

பாலைவனப் பதிவுகள்...!!!

எண்ணித்தான் பார்க்கின்றேன்....
எனதந்த பாலைவன வாழ்வுதனை.
புது முகங்களும் புது மொழிகளும்
புதிராக எனக்கிருக்க....
புரிந்திடத்தான் புறப்பட்டேன்....
பொதுவான மொழியாம் - அது
ஆங்கிலமும் இல்லை
அராபியும் இல்லை - தூய
டொச்சும் இல்லை.....
தந்தனர் அந்த விசித்திரமான விளக்கம்தனை....!!!!
என்னதான் அந்த மொழியென்று
கேட்டுவிட்டேன் கேணைத்தனமாக......
வந்தது பதிலொன்று பக்குவமாய்....
கம்பனி மொழியதுவென்று....
செப்புகிறேன் சிலவற்றை
சிந்தித்து பாருங்களேன்
சிக்குகின்றதா உங்களுக்கென்று......

“கலிமேறா மாஷ்துறூ” என
கனிவுடனே நவில்கின்றனர்
காலை வணக்கம் தனை...
“மஞ்சரியா finishedah?" என
வினவிடவே வெடுக்கென்றது என் உள்ளமது....
”மஞ்சரியா” என்றழைப்பது மகிழ்வான
எமது ஆகாரம் தனை என்று
மலையாளி ஒருவன் விளக்கிவிட்டு சென்றான் எனக்கு...
“மலாக்கீஷ் சிக்கு” என்று அழைத்திட்டனர்
எமதருமை தம்பியினை.....
“சுக்குள் மபீஷ்” எண்டு சுருண்டு படுத்திடுவான்
சூட்சுமமான “மலாக்கா பிரதாபன்”
“மீயா மீயா“ எண்டு ஒரு
கம்பனி கொடுத்திடுவேன் அவனுக்கு அன்று...
“காமோதி” “சபனி” என திட்டிடவும் செய்கின்றனர்
கனமான வார்த்ததனால்.....
விளக்கிடவும் முடியாது
வில்லங்கமான வார்த்தைகளை.....
என் இனிய லிபிய நண்பர்களுக்கு சமர்ப்பணம்...

இப்படி பல மொழிகளுடன்
உறவாடி - உஷ்ணமதன்
உக்கிரத்தில் ஊசலாடி...
ஒருவாறு ஓட்டிவிட்டேன்
கொடிய அந்த வருடம்தனை லிபியாவினிலே.....

20 comments:

  1. அட பாஸ் ...சூப்பர் ரொம்ப யோசிச்சிருக்க மாதிரி இருக்கே
    நடத்துங்க..நடத்துங்க...:))

    ReplyDelete
  2. யாரை ஏமாத்த பாக்குற?//

    ReplyDelete
  3. ///// யோவ்.. உன்னொட வாயில, கொள்ளிக்கட்டையை வைக்க ////

    ReplyDelete
  4. நான் ரொம்ப லேட் பரவில்லை......

    ReplyDelete
  5. பேரை கெடுக்காம விடமாட்டீங்க போல..

    ReplyDelete
  6. naga soma panam ready kilampunkoooooo

    ReplyDelete
  7. ஒத்துக்கொள்கிறேன்....
    நண்ப உன் உள்ளக் குமுறல்தனை...
    மழைக்கு கூடப் பள்ளிப் பக்கம் போகாத பஞ்சாபி "முதிர்கள் "
    கக்கூசு கழுவவந்த சீனியர் “குவாண்டிட்டி செர்வையர்...”
    தச்சு வேலைக்கு வந்து இப்ப பனடோல் கொடுக்கும் “டாக்குத்தர்...”
    sin,cos,tan தெரியாத “மேசன் சேவயர்கள்”
    போட்டு கொடுப்புக்கள் காட்டி கொடுப்புக்கள்.....
    நரிகளும்,ஓநாய் ,கழுதைகளும் கூடியமைத்த
    கூட்டணி இது.

    ReplyDelete
  8. அனைவருக்கும் நன்றிகள்....
    மதன் அவர்களின் குமுறல் புரிகிறது....

    ReplyDelete
  9. ஸ்டோரில் இருக்கும் சரக்குகளை மெஸ்ஸில் போட்டு
    நாய் பொழைப்பு பிழைக்கும் மலையாளி ஸ்டோர் முதீர்
    அவன் மட்டும் என் கண்முன் நிண்டான்
    அவன் மணி வெட்டி நான் கையில் கொடுக்கும்
    எங்களிட்ட 50 தினார் வாங்கி எங்களை வைச்சு குளிர் காஞ்ச போரம் போக்கு

    ReplyDelete
  10. வெட்டி பாஸ்February 4, 2011 at 6:35 AM

    நட்டு கழட்டி போட வந்து போக்குவரத்து முதீர்மார்
    இவரின் தொழில் என்ன தெரிமோ மாஸ்திறேக்கு கசிப்பு காச்சுவது
    போட்டு கொடுப்பது சம்சா அட்டிப்பது..... மாஸ்திறேக்கு கார் கழுவிறது
    மாஸ்திறேக்கு கழுவ ட்ரை பண்ணினவரம் அவர் இந்த கருமாந்திரம் பிடிச்சவனை விடேலயாம்

    ReplyDelete
  11. ம்ம்ம்ம்.

    ReplyDelete
  12. தம்பி நாகா ஒண்டு சொல்லுறன் கோவிக்க படாது
    கம்புஸ்ல பட்டம் வாங்கிய SURVEYORக்கு 1100டாலர் சம்பளம்
    கம்பி அட்டிகுற ராஜஸ்தான் சைன்மனுக்கு சம்பளம் 1600அடா மோனை
    அத விட அவகளில உள்ள கவனம் எண்டால் முதீர்
    ஏன் தெரிமோ அந்த நாதாரி பயல் ஆபீஸ் அருகில நிண்டு எந்த ஸ்ரீலங்கா எங்க போகுது எண்டு பார்த்து
    உடனமே முதீருக்கு குசுவி போடுவான்...

    ReplyDelete
  13. கண்ணா மூச்சி உதய் சொல்லுறீர்
    நான் ஒரு நாள் உந்த நாசமா போன சந்திரண்ட சாப்பாடை திண்டு
    வயிறு கலக்குது எண்டு பொய் கோமேர்ட் மேல இருக்க அடிகுரண்டா முதிர்
    where r u rey????
    நான் சொன்னன் ஒன் தா கோமேர்ட் எண்டு
    இது எல்லாம் குப்பை கொட்ட வந்த கண்ணியன் வேலை

    ReplyDelete
  14. மதன் அண்ணோய் அது யாரு கக்கூசு கழுவ வந்த சீனியர் கோண்டிட்டி சுர்வேயோர்
    நான் நெனைக்கிறன் ராஜபக்ச போல

    ReplyDelete
  15. panda thariipu pannadaiFebruary 4, 2011 at 7:14 AM

    நாகா அதை விட ஸ்ரீலங்கா இருந்தன்ஜா
    அல்லைபிட்டி சிங்கம் அஞ்சா நெஞ்சன் ஆர்வ புலி ,
    அவரை பார்த்தால் போடி பயல் மாதிரி தான் தோணும் போட்டானே அடி குப்பிரசி போர்மேனுக்கு
    அதை மறப்போமா .....போட்டு தாக்கினது தான் மட்டும் எண்டு பார்த்தால்
    நான் நிவாடு போயி வந்து பார்த்தன் அவனை குப்பிரசுக்கு பக் பண்ணிபோட்டங்கள்

    ReplyDelete
  16. ஒரு நாள் ஆபீஸ்ல புள்ள இருந்தான் site போகல
    எனது சகோதர் மொழி அண்ணன் ஒரு கடுதாசில அடிக்கடி டிக் பண்ணி கொண்டு இருந்தான் எனக்கு புரியேல்ல
    1 hourukku பிறகு தானே எனக்கு என்னவெண்டு புரிஞ்சுது
    என்ன சொல்லுங்கோ பார்ப்பம்
    எங்கட முதீரின் செகரட்ரி அயல் நாட்டான்
    அவன் ஒரு நாளைக்கு எதனை மஸ்திரே சொல்லுறான் எண்டு குவண்டிட்டி பண்ணிட்டு இருந்திச்சு நம்ம கவன்டிட்டி சேர்வயர்
    டோடல் சம் ஒப் தா மஸ்திரே =347(7.00am to 6.00am)
    அதில் சில yes masthirey, no masthiry.i cum masthiry, i speak masthirey,salla masthirey.i send masthirey, he fuk masthirey ippadi pala

    ReplyDelete
  17. அண்ணோய் நாகா உங்களை இஞ்ச பஞ்சபியும் மலையாளியும் தேடுறனுவல்
    மாட்டினடி ஆப்பு தாண்டியோய்

    ReplyDelete
  18. சிநேகிதிJune 4, 2011 at 10:52 PM

    அப்போ நீங்க அராபி,டொச்சு எல்லாவற்றிலும் புலமை பெற்று இருகின்றீர்களோ??? வில்லங்கமான லிபிய மொழியில் புலமை பெற்று விட்டீர்களா???

    ReplyDelete
  19. எல்லாம் கலந்த ஒரு கலவை தான்.....

    ReplyDelete