Friday, February 11, 2011

தொப்பையப்பன்....!!!

கண்டதைப் படிச்சு "பண்டி"தனாகு என்பார்.
நானோ........
கண்டதையும் திண்டு வண்டியனாகிவிட்டேன்....!!!
முயன்றுதான் பார்க்கின்றேன்....
முடியவில்லை என் 
மூச்சுமுட்டக் "கட்டும்" பழக்கம்தனை....

சிம்பிலான என் டயற்று
செப்பிடுவேன் உனக்கிங்கு.....
காலையில எழுந்து கதறியடித்து ஓடும் போது
கையில கறுப்பான கன்டோசு
கடித்திடுவேன் போகும் வழி நெடுக.
சைற்றுக்குப் போய் சைற் டிஷ்ஷோட
மீகோரின் வித் கொபீ(f).....
லைற்றான் பிரேக்பா(f)ஷ்ற்....!!!
பத்து மணிக்கு பாதியில பசியெடுக்க
பக்காவா கொபீ(f) ஒண்டு வித் எக்‌ஷ்ரா சுகர்......
பைய நடைபோட்டு பாதியில நடந்து போக
பதினொண்டரை ஆகிடுமே....???
பறந்திடுவேன் பசியாறிட பூ(f)ட்கோனருக்கு
பட்டாளத்துடனே.....
விதம் விதமாய் 
மட்டின், சிக்கன் 
விட்டிடத்தான் முடியுமா????
full கட்டொண்டு....
எப்பவுமே என்பிரியமான
பலூடாவுடன்.......
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ,,,,,,
மூச்சுவிடவும் முடியாது...
மூண்டு மணிக்கெல்லாம்
மீண்டுமொரு ரீ பிரேக்....
குடிப்பன் ஒரு கொகோகோலா...
வீடு செல்லும் வழி தனிலே
எடுதிடுவோம் bun ஒண்டு......
வீடடைந்து விறுவிறுப்பாய்
சமைத்து முடித்திடுவோம்
நாவுக்கு ருசியான நல்லுணவுதனை.....
நடக்கமுடியா அளவிற்கு
நன்றாக விழுங்கிவிட்டு......
நாவாற கதை பறைந்து....
பவ்வியமாக பாலருந்தி
படுக்கைக்கு சென்றிடுவேன்......!!!!
எப்படித்தான் குறைத்திட முடியும்
எக்கச்சக்கமான தொப்பைதனை......???

5 comments:

  1. நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....
    இனி தினமும் வருவேன்.
    ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...

    ReplyDelete
  2. ஓட்டும் போட்டுட்டோம்ல்ல... //// Folowerஆகிடோமில்ல..

    ReplyDelete
  3. சிநேகிதிJune 4, 2011 at 10:37 PM

    கவிதைக்கு பொய் அழகு...

    ReplyDelete
  4. தவறு.... பொய்யும் அழகு....

    ReplyDelete