Friday, February 4, 2011

சபராவின் மன்னர்கள்.....!!!

மனக்குதிரைதனை தட்டிவிட்டேன்....
மகிழ்வான என் பல்கலை வாழ்வதற்கு.
மறந்திடத்தான் முடியுமா.....???
நான்காண்டு வசந்தமதை .....
ஒன்றாக கூடி கும்மியடிச்சு
குடித்து கும்மாளமிட்டு.......
பகிர்ந்துண்டு பறித்துண்டு
பரிவுடனே பழகிட்ட பாசமலர்கள்....

பகிர்கின்றேன் எம்மணியினர்
பதினெழுவர் பற்றி பவ்வியமாக.....!!!
செல்லத்தம்பியாம் "ஜெயரூபன்"
எம்மணி முதல் மாணவன் இவன்.
பெரியண்ணா உருளை "அமுதன்"
ஒளிமயமான எதிர்காலமதனை மண்டையில் ஏற்றி.....
வடமராட்சியின் 'வடி'வான வாரிசு "பொன்னம்பலம்"
உண்மை பேசிடக் கூசிடும் இவன் நாக்கு....
நவீனத்தை நமக்கு காட்டிய "ஜெயந்தன்"
முக அலங்கரிப்பில் முதன்மையானவன்.
மகளிர் விவகார அமைச்சர் அண்ணா "நவஜீவன்"
மங்கையர்'தம்' உள்ளங்கவர் 'அண்ணா' இவன்....
திருமலையின் மறத்தமிழன் 'சுகிர்'
இவன் திறந்திடா கழிவறைக் கதவுகளுமில்லை கம்பசினிலே....
சுன்னாகத்துச் சக்கரைக்கட்டி "பிறேம்"-இவன்
விழித்திருந்து விரிவுரைகளே இல்லை.
மன்னாரின் மாண்புமிகு மொட்டை "கிசோ"
சோமபானம் இன்றேல் சோர்ந்திடுவான் அன்றே.......
சொப்பனத்துச் சொக்கன் "சுகந்தன்"
சுந்தரிகள்தம் "உள்ளம்"கவர் கள்வன்.....
கறுப்பென்றாலும் களையானவன் "வாகீஷ்"
கவர்ந்திடுவான் கன்னிகளை காந்த சிரிப்பதனால்......
கட்டழகு பொ(B)டிபி(B)ல்டர் "டார்வின்"
கவர்ந்திடத்துடித்திடுவான் கன்னி'களை' கட்டழகைக்காட்டி.......
எமதணியின் சொக்லேற் போ(B)ய் "கிரி"
இவன் செப்பும் "பி...' இல் இருக்கு ஒரு கிக்கு.....
மலையகத்தின் முத்து "ரட்னா"
எதைக் கண்டும் அஞ்சிடுவான்....
மட்டுவின் மைந்தன் "டிரேஷ்"
சிரித்தே கொன்றிடுவான் சிம்பிளாக....
ஒல்லிக்குச்சி உடம்புக்காரன் "குரு"
தூங்குவதில் வென்றிடுவான் இராவணனை....
சிரித்தே மழுப்பிடுவான் "றியாஷ்"
திருட்டுத்தனங்களின் உறைவிடமும் இவனே.......
இவ்வணியில் ஒருவனாக
அடியேன் நானும்........!!!
சபராவின் மன்னர்கள் நாமெல்லோ.........

1 comment:

  1. முதல் வருட பச் றெப்பு,
    'வக்கற்' அடிச்ச அண்டே
    'கரியா போடா' எண்டு
    'கேம்' கேட்ட 'கங் ஸ்ரார்'
    'அமாலி' பஸ்ஸுக்கே
    ...'தண்ணி' காட்டிய தமிழன்.
    பெலி குல் ஓய பொலிசோடு
    பிணையெடுத்து குளோசான
    குல தெய்வம்.
    பலசுக்கு படையெடுத்து போய்
    றூபசிங்க வருதெண்டு ஆரோ
    கதையளந்த காரணத்தால்
    'வை' சந்தியோடு நடை மறந்த சீனியர்.
    இவ்வளவும் என்ன?
    இன்னும் நிறைய உண்டு.
    இவர்தான்
    இக்கவி வரைந்த
    காரையூர் கறுவல்
    'நாகீ' எனப்பட்ட நாகா.

    ReplyDelete