Thursday, June 16, 2011

ஏக்கம்...!!!

வாய் நிறைய வார்த்தை முட்டி
வஞ்சியவள் வதனம் நோக்கி
மிஞ்சி விட்ட ஏக்கம்தனை
மிடுக்காய் களைந்துவிட்டு
உதிர்த்திடத் துடிக்கின்றேன்
என் உயிர் அவள் என்று.
எனதன்பை மொத்தமாய்
வெளியனுப்பி
அவளன்பு அத்தனையும்
மொத்தமாய் பெற்றிடுவேன்.
அவளன்பின் துளி பட்டே
துயர் மறந்து சிரிக்கின்றேனே...
அவள் அன்புக் கடல் மூழ்கின்
அகிலமே என் வசமே...
அந்தொரு நன்நாளுக்காய்
அனுதினமும் ஏங்கி நின்றேன்..
அடைந்திடுவேன் அவளன்பை
இரவி அஸ்தமன உதயமதில்......!!!

Wednesday, June 8, 2011

ஏனோ....???

உன்கன்னக்குழி அழகில்
கார்கூந்தல் முடியழகில்
மெல்லப்பேசிடும்
மெலிதான உரையழகில்
வண்ணத்தமிழ் ஊறும்
வளமான உதட்டழகில்
கன்னியுன் காந்த
விழியழகில்
பல்கதை வீசும்-உன்
பண்பான சிரிப்பழகில்
பாவையுன் பல்லழகில்
படபடத்திடா
பாவியிவன் இதயமது......
கன்னியுன் கனிவான
சிந்தையினால்
சிறகடிக்கத் துடிக்கிறதே...!!!

Monday, June 6, 2011

நட்பு...!!!

உணர்ந்திட மட்டும்
உணர்த்திட மட்டும்
உரைத்திட முடியா
உன்னத உறவு.....

மது...!!!

மதி மயங்கிட
மகிழ்வோங்கிட
பருகிடும் கசாயம்....!!!

அன்னை...!!!

மூன்றெழுத்தில்
முற்றுமானவள்.....

கணணி...

கடி பொழுததனை
களி பொழுதாக்கும்
கலியுக ஜாம்பவான்...

நித்திரை...!!!

கண்பாவைக்கு
திரை போட்டு மறைக்கும்
கட்டாயச் செயல்....

மனக்கலக்கம்...!!!

இனம் புரியா வலி
இங்கெனக்கு குடிகொள்ள...
தெளிந்திட முயல்கின்றேன்
தெளிவிப்பார் யாருமின்றி...!!!
என்மன வினா அம்புகளுக்கு
எளிதாய் தப்பிடவும் முடியவில்லை
எகிறிடவும் முடியவில்லை...
எப்பொழுதும் தப்பு என்று
எண்ணுகின்ற என் மனது
இப்பொழுது மட்டும் அதை
எண்ணிடவே மறுக்கிறது....
தப்பென்றாலும் தடாலடியாய்
முடிவெடுக்கும் என்மூளை
இக்கணக்கு முடிச்சவிழ்க்க
முடியாமல் தவிக்கிறது.....
தப்பென்பர் சிலபேர்...
தப்பில்லை தாமிருப்போம்
உனதருகே என சிலபேர்.....
ஒன்பது கூடு காகிதம்
ஒத்துழைக்க மறுக்கிறதே...
இறுதியில் வெல்லப்போவது
காகிதமா???? - அன்றி
கருவான எனதினிய கனவா....???

Saturday, June 4, 2011

மழை

வானத்தாயவளின் வலிய
கண்ணீரில்.....
வசந்தம் அனுபவிக்கும்
வஞ்சனையான பூமித்தாய்.....!!!
அதுதானோ மாந்தருள் சிலர்
பிறர் துன்பத்தில்
இன்புற்றிருக்கின்றனரோ.....????

கடவுள்....!!!

கற்பனையின் மறுபெயர் கடவுள்...
இல்லாததை இருப்பதாய் உணரும்
இவ்வுலகில்....
சர்வாதிகார ஆட்சி நடத்தும்
கடவுள் எனும் மாயை.....!!!!

ம்ம்ம்........

சொல்லிட சொல்லிருந்தும்.....
செல்லிடமதுவிருந்தும்.....
சொல்லிடவும் முடியவில்லை...!!!
சென்றிடவும் முடியவில்லை...!!!
சோகமது வாழ்வான பின்பும்
சோதனைகள் பல தாண்டி
சாதித்த பின்பும்கூட....
செப்பிட வார்த்தைகள்தான்
முட்டுகின்றது - ஆனாலும்
முடியவில்லை.
முடிவாக
முத்தான மகரம் தனில்
ம்ம்ம்.....