நினைத்தாலே தித்திடுவாள்.....
என் நாவில் சுவைத்திடுவாள்......
பொன்னென்றும் பொருளென்றும் புகழென்றும் பார்த்திடவும் மாட்டாள்.....
பித்தனிவன் சித்தத்தில் தித்திட
மறுத்திடவும் மாட்டாள்......
அப்போதும் இப்போதும் எப்போதும்
என்னுடனே பிணைந்திருப்பாள்......
கள்வர்தனால் கவர்ந்திடவும் முடியாது....
கற்பழித்து கடாசிடவும் முடியாது....
வருடங்கள் பல கடந்தும்
வடிவுதனில் குன்றிடவும் மாட்டாள்....
தேனென்பேன் அமுதென்பேன்
தெவிட்டிடா ரசம் என்பேன்....
பித்தனிவன் பேனா முனையிலினால்
வரைந்திடத்தான் முடியாதென்பேன்
பேதையவள் பெருமைதனை......
அவள்தான் என் உள்ளங்கவர் காதலி
எனதன்பின் 'தமிழ்'......!!!!
ஏண்டா...! சாமி...! என்னை இத படிக்கவச்சே...!
ReplyDeletearumai arumai
அருமை நண்பரே அருமை. தொடர்ந்தும் 'தமிழை' காதலியுங்கள். கட்சி எல்லாம் மாறுற சேட்டை இருக்கக்கூடாது.
ReplyDeleteநன்றிகள்.....
ReplyDeleteதமிழ் மொழி போல் இனிமையான மொழி இந்த உலகத்தில் இல்லை...
ReplyDelete