தமிழர் திருநாளாம்.....
தை(க்) குழந்தை பிரசவ நாள்....
மகிழ்வையே பொங்கலாக பொங்கி
மகிழ்ந்திருந்த காலங்களை
மறந்திடத்தான் முடியுமா.......???
உறவுகள் கூடி பொங்கல் வைத்ததும்...
உண்டு உறவாடிய பொழுதுகளும்
உறங்குகின்றன என் மன அறையில்......
இம்முறையும் கொண்டாடினார்களாம்
பொங்கல்......???
சூரியனே இல்லாத போது
சூரியப்பொங்கல் எமக்கெதுக்கு......????
எம் வம்ச வயல் நிலங்கள்
எம்மிடமே இல்லாத போது
உழவர் பொங்கல் எமக்கெதுக்கு....????
உணர்கின்றேன் வெறுமைதனை...!!!
தெற்கிலிருந்து ஒரு நாம்பன் மாடு(?)
வடக்கிற்கு போனதாம்......
பொங்கிப் படம் காட்ட....???- அதை
வடக்கிலிருந்த மந்தியொன்று
வரவேற்றதாம் மாலை போட்டு...
கண்துடைப்புப் பொங்கல் கடைசியில்
கச்சிதமாய் அரங்கேறியது......!!!
வெட்கம் கெட்ட சிலதுகள்
கூவிட்டாம் "பொங்கலோ பொங்கல்"என்று
ஆனவன் இல்லையென்றால் ஒரு முழம் கட்டை தான்........
ம்ம்ம்ம்ம்ம்.......
சூரியனும் வந்திடுவான்.......
எம் உழவு நிலங்களும்
விளைந்து நிற்கும்......
அப்போது கொண்டாடிடலாம்
தூய தமிழ் பொங்கல்தனை.....
அருமை......!!
ReplyDeleteநன்றி....
ReplyDelete"ஆனவன் இல்லையென்றால் ஒரு முழம் கட்டை தான்.." உண்மைகள் உரைக்கும் போதும் கூட கவிதைகள் இவ்வளவு அழகு பெறுமா??
ReplyDeleteஉண்மைதான்...
ReplyDelete