Sunday, January 30, 2011

தொடர்கதை...!!!

காலையில் எழுந்து
கடன்களை முடித்து....
உடுப்பினை எடுத்து
எடுப்பாக அணிந்து....
சீப்பினை எடுத்து
செ(ம்)மையாய் வாரி.....
காலணி எடுத்து
கச்சிதமாய் மாட்டி....
பதனப்பெட்டிதனைத் திறந்து
பழம்தனைக் கடித்து.....
சாவியை எடுத்து
சட்டெனத் திறந்து.....
எட்டியே நடந்து
தரிப்பிடம் அணுக.....
தேடி நின்ற என் விழிகள்
தினமும் வணக்கம் செப்பும்
தோழியவள் வருகைதனை.....
எஞ்சியது என்னமோ
ஏமாற்றம் மட்டுமே....!!!
அவள்தன் தோழியவள்
என்னண்டை அணுகி....
உதிர்த்து விட்டுச் சென்றாள்
எதிர்பாரா வார்த்தை தனை....
"சீ ஹொட் மரீட்"
(she got married)
என்பதாக.....
மீண்டும் கூறிவிட்டேன்
என் வாழ்க்கைச் சுலோகம் தனை
மனதினுள்ளே மெளனமாக......
'ஓடு மீன் ஓடி உறுமீன்
வரும் வரைக்கும் வாடி நிற்குமாம்
நாரை.......'!!!

Thursday, January 27, 2011

சிந்தி...

தமிழன் எம் தலைவிதி....
தறிகெட்டுப் போனதுவோ...?
தார்ப்பரிய நிலங்கள் தான்
தரிசு நிலமானதுவோ...?
சொல்ல வழி இல்லாமல்
சொப்பனங்கள் காண்கின்றோம்.
ஊழி வினையறுக்க
உத்தமர்கள் வந்திடாரோ....?
இரத்தவெறிக் காடையரின்
தம்பட்டம்தனை அடக்க.
எமதினத்தை அழிக்கவென்றே
ஏமாளிக்கூட்டம் ஒன்று
ஏவல்கள்தனை இயற்ற....
எட்டப்பர் பலர் அதற்கு
தப்பாட்டம் ஆடிடவே.....
இரையாக்கப்படுகிறது - எமதினத்தின்
எதிர்காலம்...!!!

கவனி......
சிந்தி......
செயற்படு.....

நாமிருவர் நமக்கொருவர் என்பதனை
நாமிருவர் ஆவோம் ஐவர் என்றாக்கிடுவோம்.....
அழிந்திட விடமுடியாது - எம்
உயிரினும் மேலான தமிழினம்தனை - இதை
உரக்க உரைத்திடுவோம் உலகினிற்கே.....

Wednesday, January 26, 2011

என்னுயிர்க் காதலிகள்....!!!

பல நாள் தேடல்கள்....
அனுபவசாலிகளின் ஆலோசனைகள்.....
தேடும் பொறியில் தேடல்களும் கூட
எத்தனை நாள்தான் எனக்கென்று
ஒருத்தி இல்லாமல்.....!!!!!
எனக்கென்று இப்போது இருப்பவளோ
இன்றைய சூழலோடு இணைய மாட்டாளாம்....!!!
அவளுடன் செல்லுமிடமெங்கும்
அசெளகரியமாகவே உணர்ந்தேன்.
புதியவள் ஒருத்தியை சுலபமாகப்
பிடித்திடத்தான் முடியும் - இருந்தும்
உறுத்தியது என் மனது.....
என்னோடிருப்பவளின் எதிர்காலம்
என்னாகுமோ புதியவளவளின் வருகையால்.....!!!
பராமரிப்புச் செலவுதனை
சமாளித்திடவும் முடியுமோ....????
படுத்தால் தூக்கமும் இல்லை
பசித்தால் புசிப்பும் இல்லை...
எடுத்தேன் ஒரு ஏடாகூடமான முடிவுதனை......
இருவரும் இருந்திட்டுத்தான் போகட்டுமேயென......
புதியவளவள் முதல் பார்வையிலேயே
பாய்ச்சி விட்டாள்-மன்மதன் அம்புதனை
அவ்வினாடியே அவள் என்னவளாக்கப்பட்டாள்...!
எடுத்துவந்தேன் என்னுடனே....!!
புதியவளவளுக்கு அலங்கரிப்புத்தான்
எத்தனையோ.....???
எங்கும் என்னுடனே இருந்திடுவாள்
இருந்தும் நவீன நங்கையவளை
படித்திட பாடுபட்டேன் பல நாள்கள்...!
என் விரல்கள் மேய்ந்தன - அவள்
பட்டுமேனிதனை.....
சில சமயங்களில் ஒத்துழைக்கவும் மறுத்திடுவாள்.....!
இப்படியே கழிகின்றது என்வாழ்வு
இருவருடனும்.......!!!
முன்னையவள் "நொக்கியா"....!!!
புதியவள் "ஐ போன்" .......!!!

வழமைக்கு மாறான இயற்கையின் சீற்றம்.......

கடந்த 6 வருடங்களாக இயற்கையின் சீற்றம் புவிதனை உக்கிரமான முறையில் தாக்கிக்கொண்டிருக்கிறது. இப்புவிதனில் மாந்தர் செய்த பாவம் தான் என்னவோ??? 

இயற்கை அன்னையின் இந்த கோரப்பசிக்கு இரையாவது என்னமோ அப்பாவிப் பொதுமக்களே அன்றி உயர் மட்ட பூதங்கள் அல்ல. 'பட்ட காலிலே படும்' என்பது போல அல்லலுறுபவர்கள் ஒரு குறிப்பிட்ட பிராந்திய மக்களே......!!!

இந்த இயற்கையின் சீற்றத்திற்கு காரணம் தான் என்னவோ?????
விடை தேட முனைகின்றோம். அடியேனும் ஏதோ ஒரு கோணத்தில் ஆராய முனைகின்றேன்....!

புவியின் திணிவு சமநிலை இன்மையும் இதற்கு ஒரு காரணமாக அமையலாம். அதாவது ஆதிகால புவியின் திணிவு சமநிலையை இன்றையகால கட்டுமாண வளர்ச்சி குழப்பியுள்ளது என்பது கண்கூடு. இதனால் புவியின் சமநிலை மாறுவதுடன் புவியின் அச்சுப்பற்றிய சாய்வு, சுழற்சி வேகம், சுழற்சி வடிவம், சுழலும் விதம் என்பனவும் பாதிக்கப்பட வாய்ப்புக்கள் உண்டு.

ஆதலினால், மேலே விவரிக்கப்பட்ட காரணியும் இந்த இயற்கை சீற்றத்திற்கு ஒரு தூண்டுதலாக அமைந்திட முடியும்...???!!!

Tuesday, January 25, 2011

மனவோட்டம்....!!!

காலவோட்டத்தில் கலைந்துபோன
கனவுகள் போல....
கடலலைதனில் கரைந்திட்ட
மணல் வீடுகள் போல....
வானத்தாயவள் இரசாயன மாற்றத்தால்
அழிந்திட்ட வானவில் போல....
தேர்தல்கள் முடிந்தவுடன்
மறந்திடப்படும் வாக்குறுதிகள் போல.....
வாழ்வெனும் தாயவளின் காதல் எனும்
கருவும்.......
 
கலைந்திடலாம்!!!!
கலைக்கப்படலாம்!!!!
கலைத்தும் விடலாம்!!!!

இக்கருக்கலைப்பு விஞ்ஞாபனத்தில்...
கண்ணீரை சுமக்கப்போவது-எம் 
தாயவள் வாழ்க்கை(கள்) மட்டுமே....!!!
கருவான காதல் அல்ல......!!!

Monday, January 24, 2011

என்னவள்...!!!

நினைத்தாலே தித்திடுவாள்.....
என் நாவில் சுவைத்திடுவாள்......
பொன்னென்றும் பொருளென்றும் புகழென்றும் பார்த்திடவும் மாட்டாள்.....
பித்தனிவன் சித்தத்தில் தித்திட
மறுத்திடவும் மாட்டாள்......
அப்போதும் இப்போதும் எப்போதும்
என்னுடனே பிணைந்திருப்பாள்......
கள்வர்தனால் கவர்ந்திடவும் முடியாது....
கற்பழித்து கடாசிடவும் முடியாது....
வருடங்கள் பல கடந்தும்
வடிவுதனில் குன்றிடவும் மாட்டாள்....
தேனென்பேன் அமுதென்பேன்
தெவிட்டிடா ரசம் என்பேன்....
பித்தனிவன் பேனா முனையிலினால்
வரைந்திடத்தான் முடியாதென்பேன்
பேதையவள் பெருமைதனை......
அவள்தான் என் உள்ளங்கவர் காதலி
எனதன்பின் 'தமிழ்'......!!!!

போக்கிரி(கள்) பொங்கல்......!!!

தமிழர் திருநாளாம்.....
தை(க்) குழந்தை பிரசவ நாள்....
மகிழ்வையே பொங்கலாக பொங்கி
மகிழ்ந்திருந்த காலங்களை
மறந்திடத்தான் முடியுமா.......???
உறவுகள் கூடி பொங்கல் வைத்ததும்...
உண்டு உறவாடிய பொழுதுகளும்
உறங்குகின்றன என் மன அறையில்......

இம்முறையும் கொண்டாடினார்களாம்
பொங்கல்......???
சூரியனே இல்லாத போது 
சூரியப்பொங்கல் எமக்கெதுக்கு......????
எம் வம்ச வயல் நிலங்கள்
எம்மிடமே இல்லாத போது
உழவர் பொங்கல் எமக்கெதுக்கு....????
உணர்கின்றேன் வெறுமைதனை...!!!

தெற்கிலிருந்து ஒரு நாம்பன் மாடு(?)
வடக்கிற்கு போனதாம்......
பொங்கிப் படம் காட்ட....???- அதை
வடக்கிலிருந்த மந்தியொன்று
வரவேற்றதாம் மாலை போட்டு...
கண்துடைப்புப் பொங்கல் கடைசியில்
கச்சிதமாய் அரங்கேறியது......!!!
வெட்கம் கெட்ட சிலதுகள்
கூவிட்டாம் "பொங்கலோ பொங்கல்"என்று

ஆனவன் இல்லையென்றால் ஒரு முழம் கட்டை தான்........
ம்ம்ம்ம்ம்ம்.......
சூரியனும் வந்திடுவான்.......
எம் உழவு நிலங்களும்
விளைந்து நிற்கும்......
அப்போது கொண்டாடிடலாம்
தூய தமிழ் பொங்கல்தனை.....

Sunday, January 23, 2011

குமுறல்.......!

என் மன எரிமலைக் குழம்பு
குமுறிக் கொண்டே இருக்கிறது.....!
பகிர்ந்து கொள்ள இருப்பவையோ
பலப்பல......
பாவியர் உலகம்தனில்
பட்டதையெல்லாம் புட்டிடத்தான் முடியுமா?????!!!!!
எம் பேனாவைச் சுற்றி எப்போதுமே
கழுகுக்கண்கள்......!!!!!
கன்னி கழியாத என் பேனா
கனன்றிடும் குமுறல் தனை
கணக்கில்லாமலே.......
இருந்தும்.......
நட்புக்களின் நயமான நச்சரிப்புக்களினால்....
என் பேனா முனை
கிறுக்கிடும் குறுகிய வட்டமதனுள்......

இந்து அன்னை மடியில் தவழ்ந்து.... எழும்பி நடைபோட்ட நாள்கள்....

இந்து அன்னையின் மடியில் நாம் செய்த கூத்துக்கள் வெகு விரைவில் அம்பலத்துக்கு........

எதிர்பார்த்திருங்கள் தோழர்களே.......

புகை சாம்பலாக்கும் வாழ்வுதனை.......!

எனது முதலாவது பதிவுதனை ஒரு சமூகநல நோக்குடன் பதிவதையிட்டு நான் மகிழ்வடைகின்றேன்....!!!

எங்கட பெடியள் நிறையபேர் எந்த நேரமும் ”தம்”மும் கையுமாக திரியுறாங்கள்... ஏந்தான் இப்பிடி இருக்கிறாங்கள் எண்டு மண்டையைப் போட்டு குடைஞ்சதில எனக்கு வந்த சில ரிப்சுகளை உங்களுக்கும் சொன்னால் எனக்கு கொஞ்சம் ரிலாக்‌ஷா இருக்குமே....!!!

ஏந்தான் உந்த கண்றாவியை அடிக்கிறாங்கள்.....:
1) காலமையில போய் குந்தினால் லேசா போகுதாம்....!
2) ரென்சன் குறையுதாம்.....!
3) அது நட்பு வட்டத்தை அதிகரிக்குமாம்....!
4) அடிக்காமல் விட்டால் “பொன்ஷ்” எண்டு யோசிப்பாங்களாம்....!
5) பிரண்ட்ஷ் எல்லாரும் அடிக்கேக்க தாங்கள் மட்டும் அடிக்காமல் எப்பிடி இருக்கிறதாம்....!
6) தான் லவ் பெயிலியர் சோகத்தில இருக்கிறாராம்.....!
7) சும்மா ஒரு ரைம் பாசிங்காம்...!
8) பெட்டையளே அடிக்கேக்க தாங்கள் அடிக்காமல் இருக்கிறது எப்பிடியாம்....!
9)தங்கட ஷ்ரேரஷை காட்டுறதுக்காகவாம்...!
10) தண்ணி அடிச்சால் தம் அடிக்காட்டி ஒரு கிக் இல்லையாம்...!
11) ஓசியில கிடைக்குதுதானே சும்மா அடிச்சுப் பாக்கினயாம்...!
12) தம் அடிச்சால் டக்கெண்டு ஐடியா வருமாம்...!

இப்பிடி பலப்பல....

இவங்களை திருத்தவே முடியாதா????

நினைத்தால் முடியாதது எண்டு ஒன்றும் இல்லை.....

ஒருத்தனையாவது திருத்தினால் எனக்கு வெற்றி தான்......

இது தொடர்பாக தொடர்ந்தும் குமுறுவேன்........

வணக்கம்....

பதிவுலகின் முதல் தடம்.........
பதிவாளர் தம்பி பிரேமின் கரங்களை பற்றியவாறு.......
என் மனதில் பட்டதை புட்டு வைக்கும் நோக்குடன்.....
வருவோம்..... பல்வேறுபட்ட பதிவுகளுடன்......

அம்மா

அம்மா எனது ஆதார நாதம்.....
அப்பா எனது அன்பான வழிகாட்டி.......