Tuesday, January 10, 2012

தனிமை

உன் பிரிவு
என் உயிரை
மெழுகாய் உருக்குகின்றது.
இருந்தும்.....
உன் அன்பால்
என் நெஞ்சு
பூவாய் மலர்கின்றது.
உன் விரல்கள்
என் விரலிடுக்கை நிரப்ப
நித்தமும் விரிந்தே கிடக்கின்றன.
உன் கலைந்த முடி கோத
என் கறையில்லாக் கரங்கள்
காத்துக்கிடங்கின்றன.
தனிமை என்னை
நிதமும் தண்டிக்கின்றதே-அன்பே
உன் விழிப்பார்வை
விரைவினில் கிடைத்திடல் வேண்டும்
என் இமையருகே.
உன் மூச்சுக்காற்றுப்பட்டு
உயிர்பெறுவேன்
உன்னருகே- நீ
எனதருகிருந்தால்.....